அரசியல்உள்நாடு

நமது நாட்டில் டொலருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது – சஜித் பிரேமதாச

நமது நாட்டின் சமூக ஒழுங்கு குறித்து உண்மையான யதார்த்தமான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும். இதை விடுத்து வெறுமனே பேசக் கூடாது.

நமது நாட்டில் டொலருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அடுத்த ஆண்டு முதல் வட்டியில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும். பிற வெளிநாட்டு கடன்களையும் செலுத்த வேண்டியுள்ளன.

இதை அடைவதற்காக நமது நாட்டின் அந்நிய செலாவனி கையிருப்புக்களை உயர் மட்டத்தில் வெற்றிகரமாக பேண வேண்டும். இதன் பொருட்டு, சுற்றுலாத் துறையானது அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய ஏற்றுமதி வணிகங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அதேவேளை, அதனால் சமூகத்தில் ஏற்படும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும் சமச்சீரான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக மதுபான உரிமப் பத்திரம், பியர் உரிமப் பத்திரம், மதுபானசாலை உரிமைப் பத்திரம் ஆகியன சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அல்லாமல் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்டன.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு, அரசியல்வாதிகளை பலப்படுத்தவும், கட்சி தாவும் நடவடிக்கையையும் மேற்கொள்வுமே இவை வழங்கப்பட்டு வந்தன.

இந்தக் கலாசாரத்திலிருந்து விலகி நல்லொழுக்கமுள்ள நாகரீகமான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கை மது ஒழிப்பு பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் இன்று (20) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாடு பொருளாதார அராஜகத்தை எதிர்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி சில பிற்போக்கு சக்திகள் மற்றும் செயல்முறைகளால் சமூக ரீதியான பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றன.

எனவே, முறையான கொள்கை உருவாக்கத்துடன், கட்டளைச் சட்டங்கள் மற்றும் வரைவுச் சட்டங்கள் மூலம் மது இல்லாத சிந்தனை மற்றும் கருத்து உருவாக்கப்பட வேண்டும்.

அதன் மூலம் அவை செயல்படுத்தப்பட்டு, பின்பற்றப்பட்டு, கண்காணிக்கப்படவும் வேண்டும். இந்த இலக்குகளை நிறைவு செய்யும் செயற்பாட்டை வெற்றியடையச் செய்வதன் மூலம் அனைவரது அபிலாஷைகளையும் வெற்றிகொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொள்கைச் சுழற்சி தொடர்கிறதா இல்லையா என்பதை அந்தக் கொள்கைகளுக்காக முன்நிற்கும் குழுக்கள் அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு சமூகத்தை வைத்து தீர்மானிக்கும் நிலைக்கு வர வேண்டும்.

இன்று மது ஒழிப்பு இயக்கத்தை வெற்றியடையச் செய்ய முன்வருபவர்கள், குழிபறிக்க முன்வருபவர்கள் என இரு பிரிவினர்கள் உள்ளனர். மனசாட்சிப்படி இந்த 2 பிரிவினரில் மூலதனம், நிதி பலம், அரசியல் பலம் யாரிடம் காணப்படுகிறது? என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

மறுபுறம் மக்களால் ஏற்றுக்கொள்ளும் நாகரீக, அறிவொளி மிக்க மக்கள் சமூகத்தை உருவாக்க முன்வரும் குழு எது என்பதையும், இதில் நாம் எப்பிரிவில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதையும் நிதானமாக சிந்தித்து பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நல்லொழுக்கமுள்ள மக்கள் சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான யதார்த்தமான இலக்குகளை நிறைவு செய்வதற்கான பயணத்திற்கு மக்கள் சக்தியே மேலாக காணப்படும்.

மது கொண்டு சேர்க்கப்படும் பணத்துக்கு இங்கு பெறுமானம் இருக்காது. இருக்க விடவும் கூடாது. சமூகத்துக்கு அதிகாரம் இருந்தாலும், கொள்கை உருவாக்கும் நிறுவனங்களில் அதிகாரம் இல்லை.

மது, போதைப்பொருள், புகையிலை, சிகரெட் போன்றவற்றை ஊக்குவிப்பவர்கள் நிதி பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தந்த நிறுவனங்களின் கொள்கைச் சுழற்சியின் முக்கியத் தருணங்களைத் தமது பிடியில் எடுத்துக்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் – மன்னாரில் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தேர்தல் பிரசாரம்

editor

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் VVIP வசதி இரத்து – சபாநாயகர்

வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல்