உள்நாடு

‘நனோ நைட்ரஜன்’ திரவ உரம் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – நெல் உள்ளிட்ட சகல செய்கைகளுக்காகவும் பயன்படுத்தக்கூடிய ‘நனோ நைட்ரஜன்’ திரவ உரம் இன்று (20) அதிகாலை நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்கமைய, 10 இலட்சம் ஹெக்டர் விவசாய நிலப்பரப்பிற்குத் தேவையான திரவ உரமே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அதன் முதலாவது தொகுதியாக ஒரு இலட்சம் லீட்டர் ‘நனோ நைட்ரஜன்’ திரவ உரம் இன்று (20) நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதனை கமநல சேவை மையங்களினூடாக இன்றைய தினம் முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், 31 இலட்சம் லீற்றர் ‘நனோ நைட்ரஜன் திரவ உரம் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

Related posts

 நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்

இன்றைய தினத்திற்குள் கோட்டா இராஜினாமா

புலி இறைச்சி விற்பனை – மூவர் கைது