உள்நாடு

நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இதேவேளை, மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காண சிவில் உடையில் 500க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

“இதையெல்லாம் உங்களுக்காகச் செய்ய எங்களுக்கு உங்கள் உதவி தேவை. உங்களைச் சுற்றியுள்ள அந்நியர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களைப் பற்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் சொத்து மற்றும் பணத்தைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்கவும்.”

Related posts

“IMF அனைத்திற்கும் தீர்வாகாது”- ரணில்

பாண் விலையில் இன்று மாற்றம்

இஸ்லாமிய பாடப் புத்தகங்கள் முதல் பல்வேறு இடங்களில் கடும்போக்குவாதம்