கேளிக்கை

நட்பின் அடையாளம் – சந்தானத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

(UTV | இந்தியா) –  மறைந்த வைத்தியரும், நடிகருமான சேதுராமன் கட்டிய மருத்துவமனையை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார்.

தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.

சேதுராமனுக்கு உமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சேதுராமன் உயிருடன் இருக்கும் போது ஈ.சி.ஆர் சாலையில் மருத்துவமனை ஒன்றை கட்டி வந்துள்ளார். அந்த மருத்துவமனையின் பணிகள் அண்மையில் முடிவடைந்தநிலையில், சேதுராமனின் பிறந்ததினமான இன்று அந்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையை சேதுராமனின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சந்தானம் திறந்து வைத்துள்ளார்.

சந்தானம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நட்பின் அடையாளமாக மறைந்த தனது நண்பரின் மருத்துவமனையை துவக்கி வைத்த சந்தானத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீனாவுக்கு கொரோனாவாம்

எலிகளின் சண்டை : விருதை வென்றார் சாம் ரோவ்லி

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்