அதிகரித்து வரும் குற்றச் செயல்களுக்கு தீர்வாக சட்டவிரோதமாக நபர்களை கொலை செய்வது ஒருபோதும் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றும்போது குற்றங்களை தடுக்க முடியும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதனை வலியுறுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டால் இரண்டு நபர்கள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக நடுநிலையான விசாரணையை ஆரம்பிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், எதிர்காலத்தில் இது போன்ற கொலைகள் மற்றும் காவலில் உள்ள நபர்கள் உயிரிழப்பதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அந்த சங்கம் பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.