வகைப்படுத்தப்படாத

நடிகை ரம்யாவின் துணிச்சலான செயல் ;ராகுல் காந்தியின் அதிரடி முடிவு

(UDHAYAM, COLOMBO) – மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் நடிகை ராம்யாவுக்கு, காங்கிரசின் சமூக வலைத்தளம் மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவராக நியமிக்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

குத்து, பொல்லாதவன் உள்பட சில தமிழ்ப் படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் ரம்யா.

தமிழில் முதன் முதலில் ‘குத்து’ படத்தில் அறிமுகமானதால் இவருக்கு குத்து ரம்யா என்ற பெயர் ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் தனது பெயரை திவ்யா என்று மாற்றிக் கொண்டார்.

34 வயதாகும் குத்து ரம்யா மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

சமீபத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா பா.ஜ.க.வில் சேர்ந்த போதும் ரம்யா காங்கிரசிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறார்.

ரம்யா டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் நீண்ட நாட்களாக தனது கருத்துகளை மிகவும் துணிச்சலாக தன் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் இணையும் முன்பே குத்து ரம்யா டுவிட்டரில் பிரபலமாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் குத்து ரம்யாவை சுமார் 5 லட்சம் பேர் பின் தொடர்பவர்களாக உள்ளனர்.

காங்கிரசில் உள்ள பெண் தலைவர்களில் அதிக சமூக வலைதள நண்பர்களை குத்து ரம்யாவே வைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தனது டுவிட்டர் பக்கம் மூலம் மத்திய பா.ஜ.க. அரசை குத்து ரம்யா மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 25 துணைநிலை ராணுவ வீரர்கள் பலியானது பற்றி கடுமையான விமர்சனங்களை ரம்யா வெளியிட்டார்.

Related posts

Tamil MPs to meet the president today

Airman on duty shoots himself in front of Swiss Ambassador’s house

டிரம்புடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு