கேளிக்கை

நடிகை தமன்னாவுக்கு கொரோனா

(UTV | இந்தியா) – ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அந்த வகையில், ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமன்னா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஜினியுடன் மோதும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை…

அவன் தான் என் அனைத்து பிரச்சனைக்கும் காரணம்-கௌதம் மேனன் ஓபன் டாக்

“Cannes” ரெட் கார்பெட்டில் மகளுடன் ஐஸ்வர்யா ராய்… (PHOTOS)