கேளிக்கை

நடிகை ஜாக்குலினின் ஜாமீன் நீட்டிப்பு

(UTV |  சென்னை) – இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் டெல்லி போலீஸ் கைது செய்தது. இதற்கிடையே இதுதொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் செப்டம்பர் 26-ந்தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. ஜாக்குலினுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வக்கீல் வாதிட்டார். இதை ஏற்ற கோர்ட்டு ரூ.50 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த மாதம் 26-ந்தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அக்டோபர் 22-ந்தேதிக்கு (நேற்று) தள்ளிவைத்திருந்த நிலையில், ஜாக்குலினுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை நவம்பர் 10-ந்தேதி வரை நீட்டித்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related posts

‘நாச்சியார்’ பெப்ரவரி 16 ரிலீஸ்

உலக பட விழாக்களுக்கு செல்லும் சூப்பர் டீலக்ஸ்

‘கோலமாவு கோகிலா’ இந்தியில்