கேளிக்கை

நடிகையாகிறார் பிரபல விளையாட்டு வீராங்கனை?

(UTV|INDIA)-குத்து சண்டை வீராங்கனை ரித்திகா சிங், ‘இறுதி சுற்று’ படம் மூலம் நடிகையானார். அப்படம் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். இதற்கிடையில் விளையாட்டு வீராங்கனைகள் வாழ்க்கை கதை திரைப்படமாகிறது. பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை திரைப்படமாக உள்ளது. சாய்னா கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளார். அதேபோல் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா வாழ்க்கை படம் உருவாகவிருக்கிறது.

இவரது கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. சானியா அளித்த பேட்டி ஒன்றிலும்,’தனது வாழ்க்கை படத்தில் தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என குறிப்பிட்டிருந்தார். ஆனால் தீபிகா நடிப்பது உறுதியாகவில்லை. தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. சானியா மிர்ஸா வாழ்க்கை படம் நடிப்பது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், சானியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது.

அதன்படி சானியாவின் வாழ்க்கை படத்தில் சில காட்சிகள் புனையப்பட்டதாகவும், பெரும்பாலும் நிஜ சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும், மேலும் சானியாவுடன் சம்பந்தப்பட்ட ஒரு சிலபேரும் நடிப்பார்கள் என்றும் அதில் பேசப்பட்டுள்ளதாம். சானியா மிர்ஸாவாக நடிக்கும் நடிகை யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதேசமயம் தனது வாழ்க்கை படத்தில் சானியாவே நடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

 

 

 

 

Related posts

‘BEAST’ படக்குழுவின் அடுத்த UPDATE

1000 திரையரங்குகளில் பரத்தின் பொட்டு..

விலையுயர்ந்த ஆடம்பர பரிசு கொடுத்த அந்த பிரபல நடிகர்?