கேளிக்கை

நடிகைகள் வெறும் கவர்ச்சிக்கானவர்கள் மட்டுமல்ல…

(UTV|INDIA)-நடிகர், நடிகைகள் தங்கள் ரசிகர்களுடன் இணைய தள ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் வாயிலாக நேரடி தொடர்பில் இருக்கின்றனர். தங்களது செயல்பாடுகள் பற்றியும், கவர்ச்சியான புகைப்படங்களையும் பலர் பகிர்ந்துகொள்கின்றனர். அதற்கு ரசிகர்கள் தங்களது கருத்தை பதிவு செய்கின்றனர். கவர்ச்சி படங்களை வெளியிடும் நடிகைகளிடம் சில ரசிகர்கள் ஆபாசமாகவும், விமர்சித்தும் மெசேஜ் பகிர்கின்றனர். இணைய தளத்தில் ரசிகர்களுடன் அதிகமாக தொடர்பில் இருப்பவர்களில் ஒருவர் நடிகை டாப்ஸி.

ஆரம்பகாலத்தில் தன்னை பற்றி வரும் எதிர்மறையான கமென்ட்களையும், ஆபாசமான கமென்ட்களையும் கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தார். அமிதாப்பச்சனுடன் ‘பிங்க்’ இந்தி படத்தில் நடித்தபிறகு அவரது தன்னம்பிக்கை அதிகரித்தது. இதையடுத்து யார் கமென்ட் வெளியிட்டாலும் உடனடியாக அதற்கேற்ப அன்பாகவும், அதிரடியாகவும் பதிலடி தந்து வருகிறார்.

சமீபத்தில் டாப்ஸியின் தோற்றத்தை புகழ்ந்த ஒரு ரசிகர்,’உங்கள் உடல் அங்கங்களை விரும்புகிறேன்’ என நேரடியாக பதிவிட்டிருந்தார். அதைக்கண்டு கோபப்படாமல் பதில் அளித்த டாப்ஸி,’எனக்கும் எனது அங்கங்கள் பிடிக்கும், எனது பெருமூளை மிகவும் பிடிக்கும். உங்களுக்கு பிடித்தது எது’ என்று கேட்டிருந்தார். நடிகைகள் வெறும் கவர்ச்சிக்கானவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கும் அறிவு இருக்கிறது என்று மறைமுகமாக அவர் உணர்த்தியிருந்ததை பலர் பாராட்டி உள்ளனர்.

 

 

 

 

Related posts

அவசரமாக திருமணம் நடைபெற்றது ஏன்? – யோகி பாபு

‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் அதிர்ச்சியில்

கொழும்பு சூதாட்ட நிலையத்தில் நடனமாடும் நமீதா