சூடான செய்திகள் 1

நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரர் விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு

(UTV|COLOMBO) பாதாள உலக தலைவனான மாகந்துர மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நேற்று(07) இரவு நடிகர் ரயன் வேன் ரோயனின் தெஹிவளையில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், வீட்டில் இருந்து இலத்திரனியல் தராசு ஒன்றும் வீட்டில் இரகசிய துளை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவ்வேளை, விசாரணைகளுக்காக ரயன் வேன் ரோயனின் சகோதரர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்று(07) கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான யுத்தத்திற்கு தலைமை தாங்க தயார்

ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 10 வேட்பாளர்கள்