கேளிக்கை

நடிகர் நகுலுக்கு வாரிசு

(UTV | இந்தியா) – நாக்கு மூக்கா பாடல் மூலம் இளம் உள்ளங்கள் பலரையும் ஆடவைத்தவர் நடிகர் நகுல். காதலில் விழுந்தேன், மாசிலாமணி, பிரம்மா.காம் என படங்களில் நடித்து வந்த அவருக்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் இல்லை.

டிவி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்தார். தற்போது ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அவரும் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன் பிறந்த நாளை கொண்டாடினார். இந்நாளில் அவர் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தங்களுக்கு உங்களின் ஆசிர்வாதமும், வாழ்த்துக்களும் வேண்டும் என பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர் உட்பட அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்பும் ஷமியின் மனைவி

அனுஷ்காவுடன் இருக்கும் இந்த ஆண் யார்?