கேளிக்கை

பிரபு தேவாவுக்காக உருவாக்கப்பட்ட நடன தலைவன்

(UTV|INDIA) நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா நேற்று பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபுதேவா இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. பிரபுதேவா இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
சமூக வலைதளங்களில் பலரும் பிரபுதேவாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரபுதேவாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக `நடன தலைவன்’ என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் பிரபுதேவாவை முன்மாதிரியாக நினைக்கும் பல்வேறு நடன கலைஞர்கள் இதில் நடனமாடியுள்ளனர். மேலும் இந்த வீடியோவில் பிரபல நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், ஜானி மற்றும் தீபக் உள்ளிட்டோரும் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளனர்.
சந்தோஷ் நடனத்தில் உருவாகி இருக்கும் இந்த வீடியோவை கார்த்திக் என்பவர் இயக்கியிருக்கிறார்.

Related posts

குழந்தைகளுக்கு பயத்தையும், ஆசையைும் ஏற்படுத்தும் படம் `சங்கு சக்கரம்’

விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிய அனிஷா – திருமணம் நிறுத்தமா?

இந்த அம்மணி எவ்வளவு சம்பளம் கேட்கிறார் தெரியுமா?