உள்நாடு

 நகரங்களை தூய்மை படுத்தும் பணி இளைஞர்களுக்கு..

(UTV | கொழும்பு) –  நகரங்களை தூய்மை படுத்தும் பணி இளைஞர்களுக்கு..

வரவிருக்கும் 75ஆவது சுதந்திர தினத்துக்கு இணைவாக தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நம் நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இல்லாத முதற்தடவையாக இலங்கையின் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட நகரமொன்று இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக தூய்மைப்படுத்தப்படும்.

இதற்கமைய பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் 335 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 50 000 இளைஞர் யுவதிகளின் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட நகரத்தை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

13ஐ நிராகரிக்கும் கூட்டமைப்பு : ஜனாதிபதி சந்திப்பை விமர்சிக்கும் சுமந்திரன்

இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்

சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

editor