அரசியல்உள்நாடு

தோல்வியை ஏற்றுக்கொண்ட ரணிலுக்கும், நாட்டை கொளுத்துகின்ற அநுரவுக்கும் வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம் – சஜித்

தோல்வி அடைவேன் என்பதை ஏற்றுக் கொண்ட வேட்பாளராக உள்ள ரணில் விக்ரமசிங்க தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளமையால் அவருக்கு வாக்களிக்காது, அந்த வாக்கை தனக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

ரணிலுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம். அநுரவுக்கு வாக்களித்து கொளுத்துகின்ற கலாச்சாரத்தை ஆதரிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுடைய பிரச்சினை ஜனாதிபதிக்கு தெரிவதில்லை. ஜனாதிபதியின் உயிர் துடிப்பு தற்பொழுது அநுரவிடமே சென்றிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் தற்பொழுது அனுரகுமாரவின் ஊன்றுகோலாக மாறியிருக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 40 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 8 ஆம் திகதி வெளிமடையில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுடைய அறுவடை மேற்கொள்ளப்படுகின்ற போது வெளிநாடுகளில் இருந்து உருளைக்கிழங்கும் வெங்காயமும் இறக்குமதி செய்கின்ற மனிதாபிமானமற்ற அரசாங்கமொன்றே இருக்கின்றது. எனவே விவசாயிகளும் நுகர்வோரும் பாதுகாப்படைகின்ற வகையில் புதிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

குளிரூட்டி வசதிகள் ஆரம்பிக்கப்படுவதோடு பால் உற்பத்தியாளர்களையும் மிளகு உற்பத்தியாளர்களையும் பாதுகாப்போம். பச்சை வீட்டு நிர்மாணத்திற்காக சலுகை அடிப்படையில் கடன் வழங்குவோம். பூக்கள் உற்பத்திக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை வழங்குவதற்கு மாத்திரமே ரணிலுக்குத் தெரியும்.

இவற்றையெல்லாம் செய்ய முடியாது என்று ரணிலும் அநுரவும் கூறினாலும், வரிச்சலுகை வழங்குவதற்கும் கடனை இரத்து செய்வதற்கும் பணம் இருக்கின்றது. கடனையும் வட்டியையும் இரத்து செய்து செல்வந்தர்களுக்கு தேவையான விதத்தில் செயல்படுகின்ற இந்த அரசாங்கத்தை விரட்டி அடிப்பதற்கு ஒன்றிணையுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சிறந்த கையால் அநுர.

தேசிய கடனை மறுசீரமைப்பு செய்கின்ற போது EPF, ETF பணத்தை திருடிய அரசாங்கத்தின் சிறந்த கையாளாக ஜேவிபியின் அனுரகுமார திசாநாயக்க காணப்படுகின்றார். நாட்டை வங்கரோத்தடையச் செய்த ராஜபசக்களுக்காக சஜித் பிரேமதாச ஒருபோதும் கூலிக்கு கோஷம் போட்டதில்லை.

பதாகைகளை ஒட்டவில்லை. தலதா மாளிகையில் ராஜபக்ஷகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. ஆனால் அநுர குமார திசாநாயக்க அதனை செய்திருக்கின்றார். அவர்கள் விவசாய, நீர்ப்பாசன, மீன்பிடி அமைச்சுகள் உள்ளிட்ட இராஜாங்க, பிரதி அமைச்சு பதவிகளையும் பெற்று இருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சிறந்த குழு எம்மோடு இருக்கின்றது.

நாட்டை கட்டியெழுப்பக் கூடிய சிறந்த குழு எம்மோடு இருக்கின்றது. ஜனாதிபதிகள் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

தான் ஜனாதிபதியான உடன் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் பெறாத ஜனாதிபதியாக அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். ஊதியம் பெறாத தன்னார்வ சேவையாக எனது சேவையை நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

ஸ்ரீ ஜயவர்த்தனபுர விபத்து பகிடிவதையா என்பது தொடர்பில் விசாரணை [VIDEO]

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு

editor

தபால் – உப தபால் நிலையங்களுக்கு பூட்டு