உலகம்

தோல்வியின் அடி : மெலேனியாவும் பதிலடி

(UTV | அமெரிக்கா) – அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்த நிலையில் அவரது மனைவி மெலனியா அவரை விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப்பை விட அதிக வாக்குகள் பெற்று அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த அதிர்ச்சியிலிருந்தே ட்ரம்ப் தரப்பினர் மீளாத சூழலில் மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளார் மெலனியா ட்ரம்ப். டொனால்டு ட்ரம்ப்பின் தோல்வியை தொடர்ந்து அவரை விவாகரத்து செய்ய மெலனியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெலனியாவின் அதிகாரிகள் சில கூறுகையில் ட்ரம்ப், மெலனியா இடையே ஏற்கனவே பிணக்கு இருந்து வருவதாகவும் வெள்ளை மாளிகையிலேயே இருவரும் தனித்தனி அறைகளில் வசித்து வருவதாகவும் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த செய்தி ட்ரம்ப் தரப்பில் மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

 

Related posts

8 கோடியை அண்மிக்கும் உலக கொரோனா பாதிப்பு

இலங்கை நோக்கி வந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது!!!

போர் முடிவுக்கு : தலிபான்கள் அறிவிப்பு