உலகம்

தோல்வியடைந்தால் நாட்டை விட்டும் ஓடத் தயார்

(UTV | அமெரிக்கா) –  எதிர்வரும் 3ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் அமெரிக்க முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி பேசி வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்துள்ள சபதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனது பிரச்சாரத்தில் பேசிய ட்ரம்ப் “அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலேயே ஒரு மோசமான வேட்பாளருக்கு எதிராக ஓடுவது மன அழுத்தத்தை அளிக்கிறது. நான் தோற்றால் என்ன செய்வேன் என உங்களால் கற்பனை செய்ய முடியுமா? வாழ்க்கையிலேயே ஒரு மோசமான ஜனாதிபதி வேட்பாளரிடம் தோல்வியடைந்ததால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு கொரோனா

இங்கிலாந்து ராணி உலகை விட்டும் பிரிந்தார்

கொவிட் 19 – மிகக்கடுமையான உலகளாவிய சுகாதார அவசரநிலை