கேளிக்கை

தோனி ஒரு ‘பச்சைத்தமிழன்’

(UTV|INDIA) சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தல தோனிக்கு சிறுவர்கள், நடுத்தர வயதினர் மட்டுமின்றி வயது பேதமின்றி அனைத்து தரப்பினர்களும் ரசிகர்களாக உள்ளனர் என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. அவரது அதிரடி பேட்டிங், அபார ஸ்டெம்பிங் திறமை, சூப்பர் கேப்டன்ஷிப், டென்ஷனான நேரத்திலும் கூலாக இருப்பது என பல காரணங்களை சொல்லலாம்.

இந்த நிலையில் பிரபல நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது மாமியார் அதாவது இயக்குனர் சுந்தர் சியின் அம்மா, தோனியின் தீவிர ரசிகை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ தோனி ஒரு ‘பச்சைத்தமிழன்’ என்றும் தனது 85 வயது மாமியார் பெருமையுடன் கூறியதாகவும் குஷ்பு டுவீட் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

80 வயது முதியவராக விஜய்சேதுபதி…

பிரபல பாடகி காலமானார்

படப்பிடிப்பில் நடிகை அலியாபட் காயம்