விளையாட்டு

தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது

(UTV | இந்தியா) – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த குற்றசாட்டில் குஜராத் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தோனியின் மகளுக்கு எதிராக மிகவும் மோசமான வகையில் பின்னூட்டமிட்ட 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அந்தப் பின்னூட்டம் குறித்து தோனியின் மனைவி சாக்ஷி தோனி முறைப்பாடு அளித்ததார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு பிறகு அந்த சிறுவன் தோனியின் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் அவ்வாறு பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிற்போடப்பட்ட வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் நடைபெறும்

அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும்-தெற்கு அபிவிருத்தி அமைச்சு

தரங்கவுக்கு எதிரான பிடியாணைக்கு இடைக்காலத் தடை

editor