தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மிக விரைவில் சம்பந்தப்பட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று (25) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.