உள்நாடு

தொழில் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்திற் கொண்டு, தொழில் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று(18) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தமது சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் திணைக்களத்தின் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எ. விமலவீர தெரிவித்துள்ளார்.

தொழில் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்டை வந்தடைந்துள்ள விளையாட்டு வீரர்களின் வாகன பேரணி கொழும்புக்கு

பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்தும் பொலிஸார் சேவையில்..

ஹிட்லராகவும், சர்வாதிகாரியாகவும் சித்தரிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க