வணிகம்

தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஈரான் விருப்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் சந்தையில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதறகு  தமது  நாடு விருப்பம் கொண்டிருப்பதாக ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மொஹமட் ஜவாட் சரீப்  தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இடம்பெற்ற சந்திப்பின் போதே  அவர்இதனை குறிப்பிட்டார் .

ஈரான் நாட்டைச்சேர்ந்த தனியார் நிறுவனங்கள் இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை பரிமாறிக்கொள்வதற்கும் தொழில்நுட்பம்  மற்றம் பொறியில் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் விருப்பத்துடன் இருப்பதாகவும் ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சரீக் கூறினார்.

இதன் போது ஈரானுடனான தொடர்புகளை சுட்டிக்காட்டிய கரு ஜயசூரிய வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

Related posts

தூய தங்கத்தின் விலை மாற்றம்

யால தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் ஆகக்கூடிய வருமானம்

ஜூலை மாதம் முதல் சபாரி ஜீப் வண்டிகளுக்கு அனுமதிப் பத்திரம் அவசியமாக்கப்பட்டுள்ளது