வணிகம்

தொழிலுக்கான திறன்கள் கண்காட்சி

(UDHAYAM, COLOMBO) -‘எனது கனவுகள்,; எனது திறன்கள், எனது பயணம்’ என்ற புகைப்படக்கண்காட்சி யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில்   இடம்பெறுகிறது.

இந்த கண்காட்சி கூடத்தினை  கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் இணைந்து திறந்து ஆரம்பித்து வைத்தனர்.

கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தினால் பொருளாதார நிலை மாற்றத்திற்கான விசேட திறன்களை மேம்படுத்தல் எனும் கருத்திட்டத்தின் கீழ் நிலையான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காக கடந்து வந்த விடயங்கள், தொழிலுக்கான திறன்கள் தொடர்பான ‘எனது கனவுகள், எனது திறன்கள், எனது பயணம்’ எனும் தொனிப்பொருளில் இக்கண்காட்சி நடைபெற்றது.

மு.ப. 10 மணி முதல் பி.ப. 6 மணி வரை கண்காட்சி 3 தினங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பல்கலைக்கழக சேவை நிறவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் யூடி தீபன் மற்றும் அதிகாரிகள் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தில் கற்கும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

வெங்காய பயிர்ச் செய்கையில் தொற்று

சுற்றுலாத்துறை – வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு

சுற்றுலா துறையில் இலங்கை முன்னேற்றம்