வணிகம்

தொழிலாளர் வர்க்கம் அரசாங்கத்தை ஆதரிப்பது மேதினத்தில் தெளிவாகியுள்ளது

(UDHAYAM, COLOMBO) – தொழிலாளர் வர்க்கம், அரசாங்கத்தை ஆதரிப்பது மேதினத்தில் தெளிவாகியுள்ளது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் விசேட வர்த்தக தீர்வை சட்டத்தின் கீழான பத்து கட்டளைகள், சுங்கக்கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு பிரேரணைகள், உற்பத்தி வரி, விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி சட்டத்தின் கீழா கட்டளை போன்றவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையில் இன்று நாட்டிற்குள் சரியான பொருளாதார கொள்கை அமுலாகுகின்றன. தேசிய உற்பத்தியாளரை பாதுகாப்பதற்கான சில கட்டளைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் மூலம் விவசாயத்துறையின் பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.

தொழிலாளர் வர்க்கம் அரசாங்கத்தை ஆதரிப்பது மேதினத்தில் தெளிவாக தெரிந்தது. நாட்டில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கினார்கள். அரசாங்கம் மக்கள் ஆணைப்படி நடக்கிறது. ஆனால் சில அதிகாரிகள் முன்னேற்றப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

எரிபொருள், சமையல் எரிவாயு முதலான பண்டங்களின் விலை குறைப்பு பற்றியும் நிதியமைச்சர்  பேசினார்.

அமைச்சர் கபீர் ஹஷீம் உரையாற்றுகையில் முன்னைய அரசாங்கம் மோசடி வர்த்தகர்களால் செல்வச் செழிப்பு மிக்கதாக மாறியது என்றார். சமகால அரசாங்கம் மக்கள் பணத்தை அவர்களிடம் திருப்பி ஒப்படைக்க பாடுபடுகிறதென அவர் கூறினார்.

Related posts

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு

இன்றைய நாணய மாற்று விகிதம்