சூடான செய்திகள் 1

தொழிலாளர் திணைக்களத்தில் நிதி நெருக்கடி

(UTV|COLOMBO)-பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியாதளவு தொழிலாளர் திணைக்களத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச சேவை தொழில் அலுவலக பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச பணியாளர்களின் போக்குவரத்து கொடுப்பனவை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாது விட்டால் ஜனவரி மாதத்திலிருந்து தொழில் அதிகாரிகள் சிரேஸ்ட கடமைகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக       அரச சேவை தொழில் அலுவலக பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஐ.சி கமகே தெரிவித்துள்ளார்.

எனினும் அவ்வாறானதொரு நிதி நெருக்கடி தொழிலாளர் திணைக்களத்தில் இல்லையென தொழிலாளர் திணைக்களத்தின் ஆணையாளர் ஆர்.பீ.ஏ. விமலவீரகந்த தெரிவித்துள்ளார்.

அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கமைய குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் : பிரதமரிடம் ஆளுநர் கோரிக்கை

இன்றைய வானிலை…

பாராளுமன்றம் மீண்டும் 29 ஆம் திகதி கூடும்