உள்நாடு

தொழிற்சாலை ஊழியர்கள் 1400 பேரிற்கு அதிகமானவர்களுடைய PCR பரிசோதனைகள்

(UTV | கம்பஹா ) – கம்பஹா – திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 1400 பேரிற்கு அதிகமானவர்களுடைய பிசிஆர் பரிசோதனைகள் இன்று(05) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த பெண்ணின் கணவன் மற்றும் மகன்கள் இருவருடைய பிசிஆர் பரிசோதனைகளும் இன்று(05) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் 150 தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று(04) பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்றை தினம்(05) கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது

Related posts

தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை – சந்திரசேன.

கப்ராலின் இடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமனம்

டொலரின் பெறுமதி ரூ.275 ஆக உயர்வு