வகைப்படுத்தப்படாத

தொழிற்சாலையின் பாய்லர் வெடித்து தீவிபத்து

டொமினிகா தலைநகர் சான்டோ டொமிங்கோவின் வில்லாஸ் அக்ரிகோலஸ் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாய்லர் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.

இதன் காரணமாக தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட 45 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

நேபாளத்தில் உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ

பேஸ்புக்கின் ஆளில்லா விமான சோதனை வெற்றி

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பெண்கள் வைத்தியசாலையில்