உள்நாடு

தொழிற்சங்கங்கள் பல இணைந்து கொழும்பில் இன்று சத்தியாக்கிரகம்

(UTV | கொழும்பு) –  ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனக்கோரி அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பில் இன்று(12) சத்தியாக்கிரகம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் அதிபர் சங்கங்கள், மாணவர்களுக்கான இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டம் 31 ஆவது நாளாக இன்றும் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள சத்தியாக்கிரக போராட்டத்தில் இலங்கை வங்கி சேவையாளர் சங்கம், அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட மேலும் பல தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

Related posts

“Women in Politics” அங்குரார்ப்பணம் – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவி நீக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா