உள்நாடு

தொலைத்தொடர்பு திருத்தச் சட்டம் நிறைவேறியது.

இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டம் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தைத் தொடர்ந்து குழுநிலை விவாதத்தில் சில திருத்தங்கள் இணைக்கப்பட்டன.

கடந்த மே மாதம் 10ம் திகதி குறித்த சட்டமூலத்தை தொழில்நுட்ப அமைச்சர் சபையில் முன்வைத்திருந்தார்.

28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்புகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு துறையில் அதிக போட்டி மற்றும் நியாயமான சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு தேவையான ஒழுங்குமுறைகளுக்கு இந்த திருத்தங்கள் ஊடாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

இன்றும் உச்ச பாதுகாப்புக்கு மத்தியில் 9 சடலங்கள் அடக்கத்திற்கு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கு மில்லியன் கணக்கில் கிடைத்துள்ளது – சிஐடி