வகைப்படுத்தப்படாத

தொண்டைமானாறு கடற்பிரதேசத்தில் 56.6 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

(UDHAYAM, COLOMBO) – தொண்டைமானாறு கடற்பிரதேசத்தில் நேற்று இரவு 56.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவற்படையால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சாக்குப் பைகளில் 25 சிறிய பொதிகளாக பொதி செய்யப்பட்டு குறித்த கேரள கஞ்சா இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் அச்சுவேலி மற்றும் தொண்டைமாறாறு பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் இருவரும் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

காலி இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரவல்

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

Former Defence Secretary, IGP remanded [UPDATE]