உள்நாடு

தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்திய பணியாளர்கள்

(UTV | கொழும்பு) – எரிபொருள் பிரச்சினைக்கு இன்று (30) தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை (01) முதல் பணிப்புறக்கணிப்பு தொடரும் என இடைக்கால மருத்துவ சேவைகள் ஐக்கிய முன்னணியின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிரமங்களாலும், அதிகாரிகளினால் உரிய தீர்வு கிடைக்காமையாலும் சேவைக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தினால் நேற்று (29) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் (30) தொடரவுள்ளது.

அதன்படி, செயல்படும் தொழிற்சங்கங்கள் மத்தியில் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம், குடும்ப நலச் சேவை அலுவலர்கள் சங்கங்கள், இசிஜி மற்றும் இஇஜி அலுவலர்கள் சங்கங்கள், மருத்துவ ஆய்வகங்கள், பொது சுகாதார ஆய்வக சங்கங்கள் சங்கங்கள், பூச்சியியல் வல்லுநர்கள் சங்கங்கள், பல் மருத்துவர் சங்கம், மருந்துத் துறை ஒருங்கிணைப்பாளர்கள் சங்கம் ஆகியவை உள்ளடங்குகிறது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் இராணுவத்தினரிடம்

பிளாஸ்டிக் – பொலித்தீன் பொருட்களுக்கு நாளை முதல் தடை

அஷோக் அபேசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர் [VIDEO]