விளையாட்டு

தொடர் நிறைவடையும்வரை அவகாசம் வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் சபை கோரிக்கை

(UTVNEWS|COLOMBO ) – இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுப்பாளரை மாற்றும் விடயத்தில் நியூஸிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள தொடர் நிறைவடையும்வரை அவகாசம் வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் சபை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“தேசிய அணியின் பயிற்சி குழுவினை மாற்றுவது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விடுத்த உத்தரவை செயற்படுத்துவதற்கு நியூசிலாந்து தொடர் முடியும் வரை அவகாசம் தரும்படி இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்கு குழு நேற்று(02) அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தது” இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

அணியில் இருந்து விலக தீர்மானித்துள்ள அசார் அலி…

சமித துலான் புதிய உலக சாதனை

தனஞ்சய டி சில்வா டெஸ்ட் இலிருந்து நீக்கம்