அரசியல்உள்நாடு

தொடர்ச்சியாக தேர்தல்களை நடத்த முடியாது – அபிவிருத்தித் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றும்போது இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் தொடர்ச்சியாக தேர்தல்களை நடத்த முடியாது. நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களையும் செயற்படுத்த வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர், தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும்.

மாகாண சபைத் தேர்தல்கள் மட்டுமே நடத்தப்படவுள்ளன.

சில சட்டங்கள் மாற்ற அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாலும், இந்த ஆண்டு மாகாண சபைத் நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

19 கோடி பெறுமதியான நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

முஸ்லிம் பாடசாலைகளுக்கு 30 ஆம் திகதி விடுமுறை!