விளையாட்டு

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இங்கிலாந்து அணி 48.2 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட தொடரை இங்கிலாந்து தற்போதைய நிலையிலேயே, 2 பூச்சியம் என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

Related posts

சவூதியில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி

குத்துச்சண்டை வீரருக்கு ஓராண்டு தடை

உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்