சூடான செய்திகள் 1

தொடரூந்து தொழிற்சங்கத்தின் அதிரடி எச்சரிக்கை

(UTV|COLOMBO)-தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் தற்போது சேவையில் ஈடுபடும் 8 தொடருந்து சேவைகளும் நாளை முதல் இடைநிறுத்தப்படும் என தொடரூந்து தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் முதல் தொடரூந்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், காலை மற்றும் மாலை வேளை, 8 அலுவலக தொடரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த தொடரூந்து திணைக்களம் நேற்று நடவடிக்கை மேற்கொண்டது.

எவ்வாறாயினும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடில் நாளையில் இருந்து அந்த எட்டு தொடரூந்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தொடரூந்து போக்குவரத்துகள் இடம்பெறாவிட்டால் அதற்கான மாற்று வழியாக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

தற்போது சேவையில் ஈடுபடும் 8 தொடருந்து சேவைகளில் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியிலேயே பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

 

Related posts

சரத் என். சில்வாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

பேரூந்து கட்டண குறைப்பு-கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு பிணை