உள்நாடு

தொடரும் போதைப்பொருள் அதிரடி கைதுகள் ,போதைப்பொருள் வைத்திருந்த பெண் கைது.

(UTV | மட்டக்களப்பு) –   மட்டக்களப்பில்  போதைப்பொருள் வைத்திருந்த பெண் கைது

 

வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனையை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிடிய தகவலினை  அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்,
குறித்த பெண், 8 கிராம் ஹெரோயின் மற்றும் 1.4 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

இவ்வாறு, கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொலன்னாவை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு பிடியாணை

இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!