உள்நாடு

தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) – தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் இன்றும் (25) நாளையும் (26) மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (24) பிற்பகல் 100 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் மூலம் எவ்வித மின்வெட்டு இன்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என மின்சார சபையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதியளவான எரிபொருள் விநியோகப்பட்ட காரணத்தினால் திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு மின்வெட்டு இன்றி மின்சாரத்தை வழங்க முடியும் என அதன் குழு உறுப்பினர் எரங்க குடஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச ஜம்போ பீனட்ஸ் இனி இலங்கையில் இல்லை

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

ஜனாதிபதியின் அழைப்பை மறுத்த ராஜபக்ஷக்கள்