அரசியல்உள்நாடு

தேர்தல் வெற்றிக்காக போலியான வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்கியது – நாமல் எம்.பி

தேர்தல் வெற்றிக்காக வடக்குக்கு ஒன்றும் தெற்குக்கு பிறிதொன்றும் குறிப்பிடவில்லை.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் வெற்றிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கியது.

முரண்பாடற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற நிபந்தனையற்ற வகையில் ஆதரவு வழங்குவோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற மாவட்ட தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இந்த வாரம் முதல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவோம்.

பிரதிவாதிகளின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசுவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் பொய் சொல்வதும் ஜனநாயகம் என்று குறிப்பிட்டுக் கொண்டு சேறு பூசுவதையும் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் அரசியல்வாதிகள் மீதான வெறுப்பு மற்றும் பொய் ஆகியன மாத்திரமே வலுப்பெற்றிருந்தன.

போலியான வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொண்டு நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.

தேர்தல் வெற்றிக்காக வடக்குக்கு ஒன்றும், தெற்குக்கு பிறிதொன்றும் நாங்கள் குறிப்பிடவில்லை. தோல்வியடைவோம் என்று தெரிந்தும் பொய்யுரைக்கவில்லை.

ஆறு மாதத்துக்கு ஒருமுறை அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிப்பதாக நாங்கள் குறிப்பிடவில்லை.

நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கியிருந்தால் நாங்களும் வெற்றி பெற்றிருப்போம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு இந்த அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆகவே வழங்கியுள்ள வாக்குறுதிகளை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

சில பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

சீரழிந்து வரும் அரசியல் கலாசாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – சஜித்

editor

முஸ்லிம் திருமண வயதெல்லை – அனுர அரசிலும் சர்ச்சை | வீடியோ

editor