சூடான செய்திகள் 1

தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர பிரதமர் கோரிக்கை

(UTV|COLOMBO)-தற்போதைக்கு நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (22) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது கையாளப்பட்ட தேர்தல் முறை குறித்து மீளாய்வு செய்வதன் ஊடாக தேர்தல் முறையில் புதிய திருத்தங்களை உருவாக்கலாம். புதிய தேர்தல் திருத்தச் சட்டம் காரணமாக ஏராளமான உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் நிலையற்ற தன்மை காணப்படுகின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த தேர்தலுக்கு முன்னதாக இந்த தேர்தல் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான தீர்மானங்களை பாராளுமன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

யாழில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கமல் குணரத்ன கருத்து

மீண்டும் தமிழ் எம்பிக்களை அழைத்த ஜனாதிபதி : பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து பேச்சு

அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு