உள்நாடு

தேர்தல் முடிவுகளைப் போன்றே கொவிட் முடிவுகளும் வெளியாகின்றன

(UTV | கொழும்பு) – கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர் கருத்து தெரிவிக்கையில்;

தேர்தல் முடிவுகளானாலும்கூட, உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர், அதற்கு அப்பாலுள்ள பகுதிகளிலுள்ள முடிவுகள் தீர்மானிக்கப்பட்டு நிறைவடையக்கூடும் என்று குறிப்பிட்ட அவர், இந்த உதாரணத்தைக் கூறுவதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.

தரவுகள் கிடைக்கப்பெற்று அவற்றை உறுதிப்படுத்துவதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும்.

அத்துடன், அந்தத் தரவுகளை அறிவிப்பதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்றும் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தரவுகளுக்கு இடையே சில குறைபாடுகள் ஏற்படலாம். அவற்றைத் தாங்கள் திருத்துவதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், சுகாதார அமைச்சு என்ற அடிப்படையில் இதனைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், இது குறித்து தொடர்ந்தும் கலந்துரையாட வேண்டும் எனத் தாம் கருதவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

காப்பாற்றப்பட்ட பின்னர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

editor

இன்று மற்றுமொரு தாழமுக்கம் உருவாக வாய்ப்பு – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor

SIS அதிகாரி உயிரிழந்த விபத்து தொடர்பில் கைதான சட்டத்துறை மாணவனுக்கு பிணை