வகைப்படுத்தப்படாத

தேர்தல் முடிவுகளில் பிரமித்து போன ஜனாதிபதி…..

((UTV|COLOMBO)-தெளிவான மாற்றம் ஒன்றை நாட்டில் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைவாகவே அந்த மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சிறி லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்திடம் கூட்டத்தில் விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் மக்கள் பிரதிநிதிகளுக்கு சிறந்த பாடத்தினை கற்றுத்தந்துள்ளதாக தெரிவித்ததோடு, நாட்டில் தௌிவான ஓர் சிறந்த மாற்றத்தினை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அக்கறைப்பற்றில் தீயில் கருகி உயிரிழந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்

உலகின் மிகப்பெரிய பிரேமாக ‘Dubai Frame’-கின்னஸ் சாதனை பட்டியலில்

மல்வானை வீடு மற்றும் காணி தொடர்பான தீர்ப்பு இன்று