வகைப்படுத்தப்படாத

தேர்தல் பிரச்சாரம் முடிவுறும் திகதி அறிவிப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிக்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைப்பெறவுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதுதொடர்பான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கான திகதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதி உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 9ஆம் திகதியில் இருந்து இன்று வரையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுடன் தொடர்புடைய 31 விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் தொடர்பான 22 முறைப்பாடுகளும் சட்டமீறல்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் அவற்றில் உள்ளடங்குகின்றன.

இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இது வரையான காலப்பகுதிக்குள் 90 முறைப்பாடுகள் தமது அமைப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘Sectors affected by 04/21 to be normalised by August’

Emmy winning actor Rip Torn passes away at 88

ஜப்பானில் அனல் காற்றுக்கு 65 பேர் பலி