அரசியல்உள்நாடு

தேர்தல் சட்டங்களை மீறிய இரு வேட்பாளர்கள் உட்பட 41 பேர் கைது – நிஹால் தல்துவ

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 41 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் கற்பிட்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

சட்டவிரோதமாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடல், தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுதல், வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபடல் ஆகிய குற்றங்கள் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட அதிகாரிகள் சிலர் வாக்கெடுப்பு நடவடிக்கைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் வழமையான சேவை இன்று முதல் வழமைக்கு

சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல

editor

பயங்கரவாத தடைச்சட்டம் இரத்தாகும் சாத்தியம்