உள்நாடு

தேர்தல் கருத்துக்கணிப்பில் சஜித் முன்ணிலை

பொதுத்தேர்தலில் வாக்களிப்பது குறித்த மக்களின் நோக்கங்களை அறிவதற்கான கருத்துக்கணிப்பில் தேசிய மக்கள் சக்தியை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு  அதிகளவானவர்கள் ஆதரவு வெளியிட்டுள்ளனர் என சுகாதார கொள்கைகளிற்கான நிறுவகம்  தெரிவித்துள்ளது. சுகாதார கொள்கைகளிற்கான நிறுவகம் Institute for Health Policy நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 38 வீதமானவர்களும் தேசிய மக்கள் சக்திக்கு 35வீதமானவர்களும் ஆதரவு வெளியிட்டுள்ளனர். சுகாதார கொள்கைகளிற்கான நிறுவகம் மார்ச்மாதம் இந்த கருத்துக்கணிப்பினை நடத்தியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவு அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. 2022 ம் ஆண்டின் பின்னர் முதல்தடவையாக ஐக்கிய மக்கள் சக்தி முதலாம் இடத்தில் காணப்படுகின்றது அந்த கட்சிக்கான ஆதரவு நான்கு வீதமாக அதிகரித்துள்ளது என  சுகாதார கொள்கைகளிற்கான நிறுவகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்களுக்கான ஆதரவுகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை என கருத்துக்கணிப்பை மேற்கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தலில் வாக்களிப்பது குறித்த மக்களின் நோக்கம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐஎச்பியின் இயக்குநர் ரவி ரன்னன் எலிய ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரளவு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார் எனினும் இது உண்மையான போக்கா என்பதை பார்ப்பதற்காக மேலும் சில காலம் பொறுத்திருக்கவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு

நாடு திரும்பும் மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள்

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..! நால்வர் காயம்…