வகைப்படுத்தப்படாத

தேர்தல் கடமைக்காகச் சென்ற வாகனம் விபத்து

(UTV|MULLAITIVU)-முல்லைத்தீவு, நந்திக்கடல் சந்திக்கு அருகில இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் காயமடைந்துள்ளார்.

அவர் பயணித்த கெப் வண்டி இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் அவருக்கு பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் மற்றும் காயமடைந்த ஏனையவர்கள் சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு?

மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Premier to testify before PSC on Aug. 06