அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இதுவரை நால்வர் மாத்திரமே சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில் தேசிய ஜனநாயக முன்னணியின் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, ஸ்ரீலங்கா சமாஜ்வாதி கட்சியின் மஹிந்த தேவகே, சுயேச்சை வேட்பாளர் பிரேமசிறிமானகே மற்றும் கே ஆனந்த குலரத்ன ஆகியோர் தமது செலவு அறிக்கைகளை வழங்கிய நான்கு வேட்பாளர்களில் அடங்குவர்.

தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின்படி, அவற்றைச் சமர்ப்பிக்க எதிர்வரும் 13 ஆம் திகதி இறுதிநாள் என்றும், அதன்பின் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளுக்கு சட்டவிரோதக் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் : மனு நிராகரிப்பு

ரூமி மொஹமட் விளக்கமறியலில் [VIDEO]

உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை – மற்றொரு மாணவனை தேடும் பணி தொடர்கிறது

editor