உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் பொதுமக்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  2020 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் தேர்தல் ஒருவராக பதிவு செய்து கொள்வதற்காக சிபாரிசு செய்துள்ள நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சித்துக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாரேனும் ஒருவரின் பெயர் தேர்தல் இடாப்பில் பதிவு செய்வதற்கு சிபாரிசு செய்யப்படவில்லையெனின் குறித்த நபரின் பெயரை தொடர்புடைய பிரதேசத்தை கிராம அலுவலர் அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களின் ஊடாக 2021.01.19 ஆம் திகதிக்கு முன்னர் கடமை நாட்களில், கடமை நேரங்களுக்குள் வினவுவதன் மூலம் தேர்தல் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக் கொள்வதற்கான உரிமைக் கோரலொன்றை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்;
011-2860031, 011-2860032, 011-2860034

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இவைதான்

சுதந்திர தினத்தில் புதிய முத்திரை மற்றும் நாணயமும் வெளியீடு

பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்