உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்த கிழக்கு ஆளுநர்!

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாணத்தின் முன்னாள் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களை எனது இணைப்பாளராக நியமித்துள்ளமை எனது கடமைகளை மேற்கொள்வதற்காகவே, அவர்கள் யாரும் பிரதேசசபையின் கடமைகளில் ஈடுபடப்போவதில்லை, என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தி தொண்டமான் UTVசெய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.   

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்பாளர்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் நியமிக்கப்படுவது சட்டவிரோதமாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள செய்தி தொடர்பில் கிழக்கு ஆளுநர் UTV செய்தி பிரிவிடம் பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

”ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டமான “உருமய” காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் திட்டம் மற்றும் அரசாங்க அபிவிருத்தி திட்டங்களுக்கான இணைப்பாளராகவே இவர்கள் கடமை புரிவார்கள். நான் எனது வேலைகளை துரிதப் படுத்துவதற்காகவும், தேசிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காகவுமே இவர்களை நியமித்துள்ளேன், இவர்கள் மூலம் ஒவ்வொரு பிரதேச மக்களின் பிரச்சினைகளையும் கேட்டு அவர்களுக்கு உதவுவதற்காக இலகுவாக இருக்கும்.

கிழக்கு மாகாண செயலாளர் இந்த  நியமனங்களை வழங்கவுமில்லை, அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் இல்லை. இவர்கள் எனது இணைப்பாளர்களே”  என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திக்கு:

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலுக்கு மஹிந்த வாழ்த்து

மூன்று ஆண் பிள்ளைகளின் தாய் கொடூரமாக வெட்டிக்கொலை

இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றமிட்ட உத்தரவு