உள்நாடு

தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – தங்களின் பகுதிகளில் காணப்படும் வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பிரதி மற்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் பற்றிய தகவல்களையும் தேசிய தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் C.D விக்ரமரத்ன முன்னிலை

பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுசீரமைத்து அடிப்படைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள் – சர்வதேச நாடுகள்

சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்கள்