உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் நாளை

(UTV|கொழும்பு) – தேர்தல்கள் திணைக்களத்தில் நாளையும்(11) நாளை மறுதினம்(12) இரு கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மற்றும் அதன் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, சகல அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் நாளை மறுதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த சந்திப்பின் போது, தேர்தலை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப் பெரும குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்

மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை [VIDEO]

மேலும் 750 பேர் நாடு திரும்பினர்